பல்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் பலி இருவர் படுகாயம்(Photos)
அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றுமுன் தினம் (07.11.2022) இடம்பெற்றுள்ளது.
பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கஹடகஸ்திகிலிய கிரிப்பாவயை பகுதியை சேர்ந்த இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் கலைபீடத்தின் மூன்றாம் வருட மாணவியான நஹாதீயா (25 வயது) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி ஆகியோர் பயணித்த போது மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை கஹடகஸ்திலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.சாவகச்சேரி
யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (08.11.2022) பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின் பகுதியில் பின்னால் , மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் வெற்றிலைக் கேணிப் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 19 வயதான இரு இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புளியங்குளம்
புளியங்குளம் - ஹெப்பத்திகொலாவ பகுதியில் சீமெந்து லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (09.11.2022) நடைபெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று ஹெப்பத்திகொலாவ, புளியங்குளம் பகுதியில் குடைசாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக லொறி கவிழ்ந்ததில் சீமெந்து பைகள் வீதிக்கு அருகில் சிதறியதாகவும் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பத்திகொலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
