மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம் - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
பலாங்கொடையில் உள்ள பின்னவலா - எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றுள்ளது.
மாயமான 3 பாடசாலை மாணவிகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம்(31) வழக்கம் போன்று பயிற்சி வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆனால் இதுவரையில், அவர்கள் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன மாணவிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பலாங்கொடை பொலிஸாருக்கும் பெற்றோரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
- பலாங்கொடை பொலிஸ் நிலையம்: 045-2287222
- பெற்றோரின் தொலைபேசி எண்கள்: 076-7070913 / 077-1658788
இந்த சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri