ஹோர்முஸ் நீரிணையை வைத்து மிரட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டார் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர் இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பும் மற்றுமொரு தரப்பை மிரட்டக்கூடாது என்றும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தின் எல் அலமைன் நகரில் நடைபெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பாதிப்பு
இந்த போரின் விளைவுகள் வளைகுடா பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நிலைமை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியமானது என்றும், இதில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தமது நாடு கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.