பணப்பரிமாற்ற மோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களையும் மற்றுமொரு சந்தேகநபரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நான்கு வங்கி அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வங்கி நிதி மோசடிகள்
பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், குறித்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர் நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக்கணக்குகளை திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்கு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய நபரின் வாக்குமூலம்! கொழும்பு வீடொன்றில் சிக்கிய ஆபத்தான பொருள்