இலங்கையில் எல் நினோ நிலைமை: பாதிப்பை எதிர்கொள்ள வெளியிடப்பட்டது சுற்றறிக்கை
நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (20) அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர் வசதி வழங்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சுற்றறிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு