கோர விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு
மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (19.08.2026) பிற்பகல், பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனம் ஒன்று வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ராகம வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டி சாரதி 69 வயதுடைய தெல்கொட சேர்ந்தவர் எனவும், 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 07 வயது மகள் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காரில் பயணித்த சிறுமி ராகம வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4