இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொது மக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்
பொலிஸார் நடத்தி வரும் ஒரு விசாரணைக்காக தேடப்படும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்தி வரும் ஒரு விசாரணை தொடர்பாக இந்த சந்தேகநபர்கள் தேடப்படுவதாக பொலிஸ் மேலும் தெரிவிக்கின்றது.
பொது மக்களிடம் உதவிகோரல்
இந்த சந்தேகநபர்கள் தற்போது தங்கள் வசிப்பிடங்களிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.
எனவே தகவல் தெரிந்தவர்கள் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளரிடம் 0718 592 167 என்ற எண்ணிலும் தகவல்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் விபரம்
1- ராஜபக்ச பத்திரனகே ஹிமாலி செவ்வந்தி - இல.12, 4வது , ஒபேசேகர வீதி, கல்கிசை, அடையான அட்டை எண் - 199880503210
2- ராஜபக்ஷ பத்திரனகே தரிந்து ஜீவந்த - அடையான அட்டை எண் - - 200430904977
3- பத்தேகம பத்திரனகே விராஜ் நிமஸ்க, இல.16, 4வது , அபேசேகர இடம், கல்கிசை, அடையான அட்டை எண் - 199532800493
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan