ராஜபக்சவின் புதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக செலவிடப்பட்ட பணம்! ஷிரந்திக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சிங்கப்பூரிலிருந்து நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவின் முன் முன்னிலையாக தவறி வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இலங்கைக்கு திரும்பி சட்ட நடைமுறைகளுக்கு உடனடியாக இணங்க வேண்டும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஷிரந்தி ராஜபக்சவிற்கு எதிராக சட்ட நடைமுறை
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச இலங்கைக்கு திரும்பி சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத்தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, ஷிரந்தி ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியில் பெறப்பட்ட 100 மில்லியன் ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தியமை தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளும் அது தொடர்பான விடயங்களும் நீதித்துறை செயல்முறையின் மூலம் ஆராயப்படும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan