வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஆபத்தான நபர் - மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி
கணேமுல்லை, பொல்லத்த பிரதேசத்தில் உள்ள மயானமொன்றில் இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
அண்மையில் துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட கொண்ட ரஞ்சி என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவர் வழங்கிய தகவலின் பேரில் குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
புதைகுழியொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கைத்துப்பாக்கி
வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக்கும்பல் தலைவன் ஒருவரின் ஆலோசனைப்படி கொலைச் சம்பவம் ஒன்றுக்குப் பயன்படுத்தப்படும் நோக்குடன் பொல்லத்த மயானத்தில் உள்ள புதைகுழியொன்றுக்குள் குறித்த கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான தகவல் கொண்ட ரஞ்சி மூலம் தெரிய வந்ததை அடுத்து மேல்மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பொலிஸார் நேற்றிரவு கொண்ட ரஞ்சியை நேரில் அழைத்துச் சென்று கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan