10 பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா
தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பியாங்யாங் பகுதிக்கு கிழக்குக் கடலை நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைப் பிரதானிகள் தெரிவித்துள்ளனர். இவை சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்து விழுந்துள்ளன.
10 ஏவுகணை
வடகொரியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தென்கொரியா அவசர பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்தைக் கூட்டி, இராணுவத்தைப் பூரண தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறும் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தூதரக உறவுகளை மீண்டும் ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி, பயிற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பைக் குறைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் தென்கொரிய கூட்டுப் பயிற்சிகள் வெள்ளிக்கிழமை முடிவடையவுள்ள நிலையிலேயே வடகொரியா இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.
ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம்