கல்முனையில் 3 வீதிகளை மறித்து ஆயிரக்கணக்கான மக்கள் 6 மணித்தியாலய போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்த்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறையை கண்டித்து அதற்கான தீர்வுகோரிதொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று திங்கட்கிழமை (24) பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட அதன் வெளிக்கதவை பூட்டி கல்முனை நகரின் 3 பிரதான வீதிகளை மறித்து 6 மணித்தியாலம் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வாகனபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிக்கபட்டதையடுத்து அந்த அதிகாரங்களை வழங்குமாறு கோரி கடந்த 92 நாளாக பிரதேச செயலகத்தின் முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில இன்று 92 நாட்களான இந்த போராட்டத்துக்கு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தனர் இதனையடுத்து நேற்று காலை 8 மணிக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு பிரதேச செயலகத்தின் முன்வாசல் கதவிற்கு பூட்டு போட்டு பூட்டி பிரதேச செயலகத்துக்குள் உட்செல்ல விடாது போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு கடமைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் உள்நுழையமுடியாது காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
அதேவேளை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று வீதி, கல்முனை நாவிதன்வெளி வீதிகளான மூன்று பிரதான வீதிகளின் சந்தியில் வீதியை மறித்து வீதியில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து நகரில் இருந்து வாகனங்களில் வெளியேறவே வெளியில் இருந்து வாகனங்கள் நகருக்குள் செல்லமுடியாததையடுத்து வாகன நெரிகல் ஏற்பட்டதுடன் பிரதான வீதிகளின் ஊடான சகல போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸார் தண்ணீர் பீச்சும் வாகனங்கள் கொண்டுவரப்பட்ட்டு பலத்த பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இருந்தபோதும் மக்கள் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து பல கோரிக்கைளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எஸ்.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், கோடிஸ்வரன். மற்றும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை இந்த வீதி மறியல் போராட்டத்தையடுத்து கல்முனை தமிழ் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கையை புறக்கணித்தனர். தினம் தினம் இந்த பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தமிழ் மக்கள் கொல்லப்பட்டுகின்றனர்.
எனவே எங்கள் சொத்தான பிரதேச செயலகத்துககான அதிகாரங்களை வழங்கவேண்டும் அல்லது இந்த பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்கள் அனைவரையும் கொல்லுங்கள் தீர்வு தரும்வரை இங்கிருந்து நகரமாட்டோம் என பொலிஸாருக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இராஜாங்க அதிபர் இது தொடர்பாக பேசுவதற்கு தனது காரியாலயத்துக்கு 5 பேரை வருமாறும் கோரிய நிலையில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து பகல் 1.30 மணிவரை 6 மணித்தியாலம் இடம்பெற்ற இந்த வீதிமறியல் போரட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |