இலங்கையில் ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள்!பலர் உயிரிழக்கும் அபாயம்
டெல்டா திரிபு தொற்றிய ஆயிரக் கணக்கானவர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெல்டா திரிபு தொற்று உறுதியானவர்கள் இல்லை என்று எம்மால் கூற முடியாது. ஒரு நோயாளி கண்டு பிடிக்கப்படுகின்றார் என்றால் அவ்வாறான ஆயிரக் கணக்கானவர்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய சாத்தியம் உண்டு.
தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியானது பயணத்தடையினால் ஏற்பட்ட அதிகரிப்பாகவோ குறைவாகவோ கருத முடியாது.
பீ.சீ.ஆர் பரிசோதனைகள் 9000 வரையில் குறைந்ததுள்ளது. மீளவும் நேற்று இந்த எண்ணிக்கை 15000 மாக உயர்த்தப்பட்டது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு தொற்றியவர்களில் 5 வீதமானோர் ஆபத்தான நிலைக்குள்ளாக கூடும் எனவும் 2 வீதமானோர் உயிரிழக்க கூடும் எனவும் இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
