வற் வரிக்காக பதிவு செய்ய வேண்டிய நிறுவனங்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
வருடாந்த விற்பனை புரள்வு 80 மில்லியனை விடவும் அதிகம் என்றால் அந்த நிறுவனங்கள் பெறுமதி சேர் வரிக்காக பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை புரள்வு தொகை விரைவில் 60 மில்லியனாக குறைக்கப்பட உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விற்பனை புரள்வு தொகை
80 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட விற்பனை புரள்வுடைய வர்த்தக நிறுவனங்கள் கைத்தொழில் நிறுவனங்கள் வற் வரிக்காக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விற்பனை புரள்வு தொகையை 60 மில்லியனாக குறைக்கும் சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து, பெறுமதி சேர் அறவீடு செய்யும் நிறுவனங்கள் பதிவு இலக்கத்தை பகிரங்கமாக காட்சிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |