இலங்கையரை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! மேர்வின் சில்வா கோரிக்கை
பாகிஸ்தானின் சியால்கொட்டில் இலங்கையரை படுகொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானமற்ற வகையில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் பாதகச்செயலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு நீண்டு கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் இலங்கை மக்கள் அதற்கான எதிர்ப்பை வெளியிடக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பொறுமையுடன் இருக்கின்றார்கள் எனவும் அது பாராட்டுக்குரியது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பிரியந்தவின் சடலம்
பிரியந்தவின் கொடூர மரணம் குறித்து அறியாத தாயார்! குடும்பத்தினர் வெளியிட்டுள்ள உருக்கமான தகவல்
பாகிஸ்தானில் இலங்கையர் கொலை: கைதானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan