சட்டவிரோதமாக கண்டல் தாவரங்களை வெட்டியவர்கள் கைது..!
மன்னார்- வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(11.11.2026) இடம்பெற்றுள்ளதுடன், அவர்களிடம் இருந்த கண்டல் தாவரங்களுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரைச் சூழல் தொகுதியின் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் கண்டல் தாவர சூழல் முக்கிய பங்காற்றுவதால், அந்தச் சூழலைப் பாதுகாப்பதற்காக கடற்படையினர் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகின்றனர்.
கண்டல் தாவரங்களுடன் கைது
இதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் , வங்காலை கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அகற்றப்பட்ட கண்டல் தாவர கிளைகளை கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் கண்டல் தாவரங்களை ஏற்றிய நிலையில் வைத்திருந்த படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்க பட்ட மூன்று நபர்கள், படகு மற்றும் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட கண்டல் தாவர கிளைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri