தொலைபேசி கோபுரங்களில் மின் கலங்களை திருடியவர்கள் கைது
தொலைபேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கலங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் வீரகெட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் கைவரிசை

வீரகெட்டிய, தங்காலை,பெலியத்த, ஹக்மன, அம்பலாந்தோட்டை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்ளில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
138 மின் கலங்களை கைப்பற்றிய பொலிஸார்

சந்தேக நபர்களிடம் இருந்து 138 மின் கலங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய சிறிய சுமை ஊர்தி, முச்சக்கர வண்டி மற்றும் வான ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வலஸ்முல்ல, ஹக்மன மற்றும் தங்காலை பிரதேசங்களை சேர்ந்தவர்களே சம்பவங்கள் தொடர்பில் து செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri