யாழில் இரு வேறு இடங்களில் நகரில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!
பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்படி யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள லங்கா ரைய்லஸ்ஸ் நிறுவனத்தினுள் நுழைந்து ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன.
இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது 29 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட அனைத்துப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இதேவேளை, யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினுள் இரவு வேளை புகுந்து பெறுமதிவாய்ந்த பொருட்களைத் திருடிய ஒருவரும் இன்று மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடமிருந்து திருடிய பொருட்களும்
மீட்கப்பட்டன.
கடந்த நாட்களில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நிகால்
பிரான்சிஸ் தலைமையிலான குழுவினரால் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பலர்
கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam