ரணிலின் கூட்டணியில் உள்ளவர்கள் திருடர்களே! ஹிருணிகா ஆதங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனோ அல்லது அவரது கட்சியில் உள்ளவர்களுடன் இணைந்து எமது அரசியல் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரகலயவின் போது தமது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவால் நட்டயீடு பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகிய நிலையில், அவ்வாறான திருடர்களுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
தலைமை பதவி
இரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கதைத்துக் கொள்கிறார்கள்.அது தொடர்பில் விமர்சிக்க நாம் விரும்பவில்லை.
ஆனால் நாம் கட்சியின் உறுப்பினர்கள்.மக்கள் எம்மிடத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் அல்லவா? எனவே இந்த கட்சிகள் இணையுமாயின் புதிய கூட்டணியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும்.
அதேபோன்று நாம் தொலைபேசி சின்னத்திலேயே களமிறங்க வேண்டும்.ஆனால் அதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
40 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாம் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டுமா? ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பிரதான எதிர்க்கட்சி. 40 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி. எனவே நாம் அடி பணிந்து செல்ல வேண்டுமா?
சுயாதீனமாகவும் கௌரவமாகவும் நாம் எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு. நெல்லுக்கு போதுமான நிர்ணய விலை வழங்கப்படவில்லை. உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
