யாழில் ஆடைகளை கலைத்து இளைஞனை தாக்கிய கும்பல்: மேலும் ஒருவர் கைது!
அண்மையில், யாழ். கோண்டாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் அத்துமீறி உள் நுழைந்த குழு, இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் ஆடைகளை கலைத்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தேடிவந்த நிலையில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுருந்தனர்.
பொலிஸாரால் கைது
இந்நிலையில் மேலும் ஒரு சந்தேகநபரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி நேற்று அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியதோடு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
