உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர்கள் விதியை சந்திக்க நேரிடும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர்களும், விதியை சந்திக்க நேரிடும் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், பேராயர் இல்லத் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியின் கர்தினால் இதனைக் குறிப்பிட்டார்.
குற்றங்களைச் செய்தவர்கள் கடந்த காலங்களைப் போலவே தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கை நாட்டின் சில அரசியல்வாதிகள், அவர்கள் மேற்கொண்ட வன்முறை செயல்களைப் போன்றே வன்முறை மரணங்களைச் சந்தித்ததைப் பார்த்ததாக கர்தினால் தெரிவித்தார்.
இதனைப் போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் அதே விதி காத்திருக்கிறது என்று அவர் மெல்கம் ரஞ்சித் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கடவுள் வெளிப்படுத்துவார். அதற்காக அவரிடம் பிரார்த்தனை செய்வதாக கர்தினால் கூறினார்.
இதேவேளை தற்கொலைத் தாக்குதல் குறித்த விசாரணையில் சில விஷயங்கள் பொதுமக்கள் பார்க்க முடியாதவை என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
