பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுதலை? கொழும்பு ஊடகம் தகவல்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தீர்வொன்றை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில சரத்துகளை சீரமைப்பதற்காக தேசிய பாதுகாப்பு சபையினால் நியமிக்கப்பட்ட குழுவே இது குறித்து ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக வழக்கு தாக்கல் செய்யாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேநபர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த குழு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த குழுவின் தலைவர், முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா கருத்து வெளியிடுகையில்,
“நாட்டிலுள்ள சிறைகளில் சுமார் 400 பேர் வரையில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான குற்றச்சாட்டு ஆவணங்களை நாளைய தினம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, உள்ளநாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri