செம்மணி அணையா விளக்கில் தொல்.திருமாவளவன் அஞ்சலி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அணையாவிளக்கு நினைவுதூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழர்களின் வரலாற்றுத் துயரத்தையும், நீதிக்கான அவர்களின் கோரிக்கையையும் நினைவுகூரும் வகையில், செம்மணி அணையா விளக்கு நினைவவதூபி செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
செம்மணி அணையா விளக்கு
இந்தநிலையில் நேற்று சிவாஜிலிங்கத்தின் மரண சடங்கிற்கு வருகை தந்த தொல் திருமாவளவன் நேற்று மாலை செம்மணி அணையா விளக்கு நினைவு தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன் போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனும் உடனிருந்தார்.

அதனை தொடர்ந்து வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.
குறித்த பகுதியில் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடுவது பழக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


