தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி (Photos)
தியாக தீபம் திலீபனின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தின் பல பகுதிகளில் இன்றும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.
இந்தநிலையில், தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கி நினைவேந்தல் வாகன ஊர்தி இன்று புங்குடுதீவிற்குச் சென்றது.
திலீபனுக்கு அஞ்சலி
புங்குடுதீவு, குறிகட்டுவான் பகுதியில் ஆரம்பித்த குறித்த நினைவேந்தல் ஊர்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளுக்கும் பவனியாகச் சென்றது.
இதன்போது மக்கள் திரண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 23.09.2023 (சனிக்கிழமை) மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.












ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
