நாடு முழுவதும், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் சட்டவிரோத வங்கிகள்! நாடாளுமன்றில் தகவல்
நாடாளுமன்றம் இன்று கூடியபோது, வழமையான செயற்பாடுகளை தவிர, பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இதன்போது தமது வாதத்தை முன்வைத்த எதிர்கட்சி அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல, நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நிதியமைச்சர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று குற்றம் சுமத்தினார்.
எனினும் நிதியமைச்சர், தமது கடமைகளை அமைச்சில் இருந்து சிறப்பாக ஆற்றி வருவதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கேள்வி ஒன்றை எழுப்பிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, சட்டரீதியற்ற வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிராமிய கூட்டுறவு சங்க வங்கி என்ற பெயரில் 171 வங்கிகளில் இயங்குவதாக குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சியின் வங்கியே, சட்டரீதியற்ற வகையில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏன், இதற்கு அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய, அமைச்சர் லசந்த அழகியவன்ன, இந்த வங்கிகள் மாகாணசபையின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்ககூடும்.
எனினும் தமது கூட்டுறவு அமைச்சின்கீழு் பதிவுசெய்யப்பவில்லை.
எனவே இது தொடர்பில் மத்திய வங்கியிடம் முறையிடமுடியும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் மிகவும் பாரதுாரமான பிரச்சினை நிலவும்போது, நாடாளுமன்றத்தில் நேற்று தமது சில வரப்பிரசாதங்கள் மீறப்பட்டதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில், இறக்குமதிக்காக இன்னும் 3 வாரங்களுக்கே வெளிநாட்டு நாணயங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்தின் 3 ரில்லியன் ரூபாவுக்கு 25வீத வரியை விதிக்க நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நிதியமைச்சரின் இந்த முயற்சி தவறானது என்பதை தமது அமைச்சு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் தொழில் அமைச்சரின் எதிர்ப்புக்கு மத்தியில், நிதியமைச்சர் எவ்வாறு வர்த்தமானியை வெளியிடமுடியும் என்று எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்



