தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவதற்கான காலம் இதுவல்ல: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புக்களை தெரிவிப்பதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் தமிழ் பொது வேட்பாளர் என்ற தொனிப்பொருள் தேவைப்படுகின்றது தான். ஆனால் அதற்கான களச்சூழல் இதுவல்ல என்று தொழிலதிபரும் சமூகச் செயற்பாட்டாளரும் முதலீட்டாளருமான கந்தையா பாஸ்கரன் (Kantaiyāh Bāskaraṉ) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் (IBC Tamil) தொலைக்காட்சியின் ‘நிலவரம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “இன்று எங்களுடைய இனம் அரசியல் ரீதியாக பாரிய பலமிழந்த இனமாககக் காணப்படுகிறது. இங்கு பொது வேட்பாளர் தொடர்பில் பல வினாக்கள் எழுப்பப்படுகி்ன்றன.
இதற்கு பின்னாலுள்ள அரசியல் நோக்கம் என்ன? பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அரசியல் தலைமைகள் அல்லது அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கான காரணம் என்ன? போன்ற வினாக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் இலங்கை, பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரசியலை தீர்மானிப்பது மக்கள் மாத்திரமல்ல பூகோள அரசியலும்தான். இதுபோலவே நாம் தமிழ் பொது வேட்பாளரையும் குறிப்பிடலாம்.
ஒருவரை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக தமிழர்களுடைய வாக்குகளை சிதற வைப்பதாக கூட இதைப்ப பார்க்கலாம்.
இந்நிலையில், எங்களுடைய அரசியல் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே நாங்கள் முதலிலே அரசியல் ரீதியாக பலமான இனமாக வர வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 43 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
