ஒமிக்ரோன் திரிபு உருவாக இதுவே பிரதான காரணம்:உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை
தடுப்பூசி தொடர்பில் உலக அளவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வு நிலையை நீக்கினால் கோவிட் பெருந்தொற்றை முறியடிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதான டெட்ரோன் அடானம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறுகிய மனப்பான்மையுடன் தேசியவாத கொள்கைகளை நாடுகள் பின்பற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில நாடுகளில் சமத்துவத்தை உதாசீனம் செய்வதாகவும் இவ்வாறான பின்னணியே ஒமிக்ரோன் திரிபு உருவாகக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் கோவிட் பெருந்தொற்றை இல்லாதொழிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசிகளை பதுக்கி வைத்தல் ஆகிய ஏதுக்களினால் ஆபத்து ஏற்படுமே தவிர நன்மைகள் கிடைக்காது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று அல்லாது தற்பொழுது கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிலைமையானது ஆரோக்கியமானதல்ல என டெட்ரோஸ் அடானம் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
