விடுதலைப்புலிகள் அழிய இதுவே முக்கிய காரணம்!முன்னாள் இராணுவ அதிகாரி வெளியிடும் தகவல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இந்திய இராணுவம் மாத்திரமல்ல, சீன இராணவமும் காரணமாக இருந்ததாக முன்னாள் இராணுவ அதிகாரி லெப். கேணல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
எமது ஐபிசி தமிழின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள தலிபான்களின் ஆதிக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் சீன நகர்வு, விடுதலைப்புலிகளின் அழிவுக்கு காரணம் என்ன? இதுபற்றிய மேலும் பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இந்திய இராணுவம் மாத்திரமல்ல, சீன இராணவமும் காரணமாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் விடயத்தில் இலங்கை இராணுவம் சீன இராணுவத்திடம் உதவி கோரியது.
இதன்போது கடல் வழியாக எவ்வாறு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகின்றது,கடத்தப்படுகின்றது போன்ற இரகசிய தகவல்களை சீனாவே இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது என்றும் தெரிவித்துள்ளார்.