தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் கலந்துக்கொள்ளாமைக்கு இதுவே காரணம் - கஜேந்திரகுமார்
நாங்கள் 13ம் திருத்தத்தினை ஏற்ற்றுக்கொள்ளவில்லை, அதனால் தான் நாங்கள் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் ஒன்று கூடலில் கலந்து கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
முழங்காவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் 13ம் திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் போது மனோகணேசன், மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொள்வதாகவும், எம்மையும் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் 13ம் திருத்தம் தொடர்பில் ஏற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கையிலேயே உள்ளோம். ஆனால் அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில், 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பிலேயே பேச்சில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் இதன்போது தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கயேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.