விசேட சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய 331 பேர்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 98 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 127 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 104 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 142 கிராம் 122 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 157 கிராம் 823 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 08 கிலோ 454 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 02 கிராம் 410 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 10 மணி நேரம் முன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri