பொருளாதார நெருக்கடி இதுவே காரணம்! சம்பந்தன் வெளியிட்ட தகவல்
எழுபத்து நான்கு வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 'தி ஹிந்து' நாளிதழுக்கு அவர் அளித்த செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை ஒருமுறை அல்ல, படிப்படியான செயல் என்று கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த நிலையிலும் அரசாங்கம் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீள சில அரசியல் கட்சிகளின் உதவியை நாடுகிறது, ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறு எந்த தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெறாதது பாரிய குற்றமாகும்.
எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்
எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தியை அடைய இலங்கை அரசாங்கம் திட்டவட்டமான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பவும், நாட்டு மக்கள் அனைவரினதும் இறையாண்மையை உறுதிப்படுத்தும் அரசியல் உடன்படிக்கையின் ஊடாக நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam