உண்மையை கூறும் நபர்களை அடக்குவதே அரசாங்கத்தின் கொள்கை - சஜித் பிரேமதாச
உண்மையை கூறும் நபர்களை அடக்குவது அரசாங்கத்தின் கொள்கை என எதிர்க்கடசித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மையை கூறியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்து விசாரணை நடத்துவதன் மூலம் அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களுக்கு உண்மையான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களையும், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கும் அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைப்பது புதுமையான விடயம் அல்ல எனவும் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri