தென்னாப்பிரிக்காவை உலுக்கும் குற்றங்கள் - பொலிஸாரின் கட்டுப்பாட்டை இழந்த நகரம்
புதிய இணைப்பு
தென்னாப்பிரிக்காவில் கடந்த 7 நாட்களில் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இதுபோன்ற குற்ற அலை உடனடியாக ஒடுக்கப்பட வேண்டும், அதற்காகப் பாதுகாப்புப் படைகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, குற்றங்கள் அதிகம் நடக்கும் சில பகுதிகளுக்கு இராணுவமும் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வார இறுதியில் தென்னாப்பிரிக்கா முழுவதும் பல முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸார் ஊழலை விசாரிக்கும் மட்லாங்கா ஆணையத்தின் விசாரணைகள், மற்றும் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்திற்கு அருகில் தொடர்ந்து 10 பெண் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களை இதற்கு உதாரணமாக கூறலாம் என தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகளைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை தென்னாப்பிரிக்க பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜோஹன்னஸ்பேர்க் மற்றும் கேப் டவுன் ஆகிய பகுதிகளுக்கு அருகில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல்
ஜோஹன்னஸ்பேர்க்கிற்கு அருகில் உள்ள வெடேலா பகுதியில் உணவகமொன்றில் ஏகே-47 துப்பாக்கிகளுடன் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

சட்டவிரோத தங்கச் சுரங்கக் குழுக்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியே இத்தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கேப் டவுன் நகருக்கு வெளியே அமைந்துள்ள உணவகமொன்றில் நடத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
வியாபாரப் போட்டியின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்துள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரித்தானியாவில் நுழையத் தடை! டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ஏதிலிக்கு நேர்ந்த சோகம்
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam