பத்தேகம துப்பாக்கிச் சூடு - துப்பாக்கிதாரி யார்..! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பத்தேகம - ஹிக்கடுவ வீதியில் சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்கள் யாரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற விவரங்களையும் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(27.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையை மறித்து நடத்தப்பட்ட தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பத்தேகம - ஹிக்கடுவ வீதியில் சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மறித்து, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதில், சாரதி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றொரு படுகாயமடைந்த நிலையில், காலி தேசிய மருத்துவமனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலுக்காக டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தியுள்ளனர் என்றும் பொலிஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு
இவ்வாறு உயிரிழந்தவர்கள், அம்பலங்கொட - குளிகொட/மீட்டியகொட பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயது லலித் சுசந்த டி சில்வா மற்றும் அம்பலங்கொட - கொடஹேன, ரத்துகுருச வீட்டு வசதிப் பகுதியைச் சேர்ந்த, “கலு நோனி” என்ற புனைப்பெயர் கொண்ட 47 வயது சுசிதா இரோஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த டி.என்.ஜி, மற்றும் மற்றொரு பெண்ணான மல்லிகா, உயிரிழந்த சுசிதா இரோஷானியின் தாயார் ஆவார்.

இவர் தற்போது கரபிட்டியாவில் உள்ள காலி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு
இறந்த பெண், ஞாயிற்றுக்கிழமை பத்தேகமவில் உள்ள காலி மாவட்ட குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் முன்னியாகி விட்டு, ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுவதற்காக அம்பலங்கொடைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளின் படி, காரில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர், தனது வாகனத்திலிருந்து இறங்கி அந்த முச்சக்கர வண்டியின் பாதையை மறித்தவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னர், சந்தேக நபர்கள் ஹிக்கடுவ நோக்கித் தப்பிச் சென்றனர்.
திட்டமிடப்பட்ட தாக்குதல்
இறந்த பெண், லட்டுவ ஹண்டி சுஜீவ ருவன் குமார என்ற “லோக்கு பட்டி” என்பவருடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சோபனஹண்டி ஜெயலத் டி சில்வா என்ற “கரண்டேனிய சுத்தா” வால் இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்குக் காரணமான சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.