இது பௌத்த நாடு என்பதை மறந்துவிட்டீர்களா! சரத் வீரசேகர கேள்வி-செய்திகளின் தொகுப்பு
வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும், அது தமிழர் தாயகம் என்பதை மறைமுகமாக எடுத்தியம்பும் வகையிலேயே தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கூறுவது போல் 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல.
13ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரமே கனிந்துள்ளது.
இலங்கையில் 13 க்கு எதிராக பிக்குகள் கூட வீதியில் இறங்கியுள்ளமை அண்ணாமலைக்குத் தெரியவில்லையா? இது பௌத்த நாடு என்பதை அவர் மறந்துவிட்டாரா? என கூறியுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
