யாழ்.கலாசார மண்டபத்தை தமிழர்களிடம் கையளிக்குமாறு ஆறு திருமுருகன் கோரிக்கை
தமிழர்களது மண்ணில் தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாசார மண்டபத்தை தமிழர்களிடம் கையளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நல்லை ஆதீன சுவாமிகள் இந்திய மீன்வள இணை அமைச்சரிடம் இடித்துரைத்தாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசின் மீன்வள இணை அமைச்சர் நேற்றைய தினம் நல்லை ஆதீனத்திற்கு சென்று நல்லை ஆதீன முதல்வர் மற்றும் இந்து மாமன்றத்தின் உப தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது நல்லையாதீன முதல்வர் மேற்படி கோரிக்கை விடுத்ததாக கலாநிதி ஆறு திருமுருகன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசிடம் கோரிக்கை
திருக்கோணேஸ்வரர், திருக்கேதீஸ்வரர் ஆலயங்களைப் புனரமைத்தது போல அதனை பாதுகாப்பதற்கும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதன்போது நல்லை ஆதீன சுவாமிகள் தமிழரின் பிரச்சினை தொடர்பில் காலம் தாழ்த்தாது தீர்வு வழங்குவதற்கு இந்திய அரசு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்திய நிதி பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினை யாழ். தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் அதனை மத்திய அரசிடம் கையளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும்.
அதேபோல கிழக்கு மாகாணத்திலும் இந்திய துணை தூதரகம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கு மக்கள் சேவையினை பெற்றுக்கொள்ள இலகுவாக அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
