மத்திய அரசிலிருந்து மாகாண அரசுக்கு வரலாம் போகலாம்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
முகாமைத்துவ சேவை சுப்ரா தர உத்தியோகத்தர்கள் மத்திய அரசிலிருந்து மாகாண அரசுக்கு, யாரும் வரலாம் போகலாமென்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம் அப்துல்லாவினால் (06) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைவாக, ஏற்கனவே இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையில் அவ்வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.
இடைக்காலத் தடை
இந்நிலைமையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதற்கான இடைக்காலத் தடை இரத்துச் செய்யப்பட்டது.
அத்துடன், முகாமைத்துவ சேவை சுப்ரா தர உத்தியோகத்தர்கள் மத்திய அரசிலிருந்து மாகாண அரசுக்கு, யாரும் வரலாம் போகலாமென்ற தீர்ப்பினையும் நீதிபதி என்.எம்.எம் அப்துல்லாஹ் வழங்கியுள்ளார்.
நிர்வாக உத்தியோகத்தர்கள் சார்பில் அரச சட்டத்தரணி இஸ்தேவனுடன் மாகாண சபை சார்பு சட்டத்தரணிகளான ஹபீலா அனஸ் மற்றும் றொஷிகா ஆகியோர் முன்னிலையாகினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
