அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் சிக்கல்: நீதி அமைச்சர் அதிர்ச்சி தகவல்!
சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான், எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கையிலேளே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது முஜிபுர் ரஹூமான், “2015 முதல் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள் அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிப் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை என்ன?
வழக்கு விசாரணை
அவற்றில் இன்றளவில் நிறைவடைந்துள்ள வழக்கு விசாரணைகளின் எண்ணிக்கை என்ன,அவ்வழக்குகள் யாவை,வழக்குகளில் சட்டத்துறை தலைமையதிபதியினால் மீளப்பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? என வினவியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர்,
“முன்வைக்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படு கொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள் , அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தரவுகளும் கிடையாது.
சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போது அரசியல்வாதிகள், அரச அலுவவர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. அது தவறானது. பொதுவான நிரல்படுத்தலே குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri