கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மூன்றாவது நாளாக முன்னெடுப்பு
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் (06.07.2024) இடம்பெற்றிருந்தது.
குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, வைத்தியர் சுபுண், கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
மனித எச்சங்கள்
அந்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியில் காப்பற் இடப்பட்ட பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக விஷேட ஸ்கான் பரிசோதனையில் தெரிய வந்திருந்தது.
இதன் போது புதிதாக தகர கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு மேலதிக மண்கள் வெளியேற்றப்பட்டிருந்தது. இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற துணி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளையதினம் விடுமுறை வழங்கப்பட்டு நாளைமறுதினம் திங்கட்கிழமை (08.07.2024) நான்காவது நாள் அகழ்வு பணி தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
