திலினி பிரியமாலி சிறையில் இருந்து வெளியில் வர முடியாத நிலைமை
முதலீடு செய்வதாக கூறி கோடிஸ்வர வர்த்தகர்களிடம் பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள திக்கோ கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற 9 வழக்குகளுக்கான பிணைகளுக்கான ரொக்கம் நேற்று வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
சிறையில் தொலைபேசியை பயன்படுத்திய வழக்கு
எனினும் சிறைச்சாலையில் தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு காரணமாக அவருக்கு வெலிகடை சிறையில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கவில்லை.
பிரியமாலிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடக்கும் 9 வழக்குகளுக்கான நான்கரை லட்சம் ரொக்கப் பிணை மற்றும் 180 மில்லியன் ரூபா சரீரப்பிணை என்பன நேற்று மாலை வைப்புச் செய்யப்பட்டன.
பிரியமாலிக்கு சரீரப்பிணை வழங்கிய கணவன் மற்றும் பெற்றோர்
திலினி பிரியமாலியின் கணவன், தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 18 சரீரப் பிணைகளுக்கான பணத்தை வைப்புச் செய்தனர்.
பிணை வழங்கியவர்களின் வருமான சான்றிதழ், சொத்து சான்றிதழ் என்பனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட பல கோடிஸ்வர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்று செல்லாத காசோலைகளை வழங்கியதாக பிரியமாலிக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.





கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
