திலகரத்ன தில்ஷான் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று (15) தெரிவித்துள்ளார்.
தனக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவி கிடைத்தால், கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட துறையை மேம்படுத்த 03 வருட திட்டம் இருப்பதாக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் தவிர்ந்த ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் எதிர்வரும் காலங்களில் மாற்றப்படுவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சியாளர் குழுவில் அதிக வாய்ப்பு
இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சமிந்த வாஸ், உபுல் சந்தன, ரங்கன ஹேரத், டி.எம்.தில்ஷான், அவிஷ்க குணவர்தன, திலின கண்டம்பி போன்றோருக்கு பயிற்சியாளர் குழுவில் அதிக வாய்ப்புகளை வழங்க புதிய கிரிக்கெட் ஆலோசகர் சனத் ஜயசூரிய உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
