திருடர்களின் சதி முறியடிக்கப்படும்! சஜித் சூளுரை
எமக்கு திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை எனவும் திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் (Gampaha) நேற்று (07.07.2024) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதைத் தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
மக்களின் சக்தி
தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை என்பது கிடையாது. அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார்.

சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை. அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க முயல்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான எந்தத் தேவையும் இல்லை. எமக்குத் திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. மக்களின் சக்தியே எமது பலம். திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam