ரணில் தொடர்பில் பசில் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டை பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாக செயற்படுகின்றோம்.நாங்கள் உங்களுக்கு எந்த பயத்திலும், அச்சத்திலும் உதவவில்லை. கடனும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவு
இந்த நேரத்தில் இந்த நாட்டை காப்பாற்றும் திறன் உங்களிடம் உள்ளது என்று எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் முடிவு செய்தனர்.இதன் காரணமாக இன்று வரை அந்த ஆதரவை நாங்கள் உண்மையாக வழங்கி வருகின்றோம்.தொடர்ந்தும் ஆதரவளிப்போம்.
நாட்டிற்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் நீங்கள் சேவை செய்யும் வரை, நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வரை உங்களுக்கு எல்லா ஆதரவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri