தென்கொரியா நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
கட்டுநாயக்காவில் இருந்து தென்கொரியாவின் தலைநகரான சியோல் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரண்டு மணிநேர பயணத்தின் பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 470 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (2024.07.07) பிற்பகல் தரையிறங்கியுள்ளது.
பயணிகளின் விபரம்
நேற்று இரவு (2024.07.07) 06.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையத்திற்கு புறப்பட்ட UL 470 விமானம் மீண்டும் இரவு 08.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் விமானிகள் உட்பட 144 பயணிகளும் 15 பணியாளர்களும் பயணித்துள்ளதுடன், அவர்கள் மற்றொரு விமானம் மூலம் சியோல் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |