நள்ளிரவில் பெண்களை இலக்கு வைத்து வீடுகளுக்குள் நுழையும் மர்ம நபர்கள்
களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் பெண்கள் மட்டும் வாழும் வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பவர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிவதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெண்களுக்கு அச்சுறுத்தல்
பெண்கள் மட்டுமே இருக்கும் வீடுகளுக்கே கொள்ளையர்கள் பெரும்பாலும் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
இரவில் உள்ளே நுழைந்து வீடுகளில் எஞ்சியிருக்கும் உணவை உண்பது, குளிர்சாதனப் பெட்டியில் உள்ள இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை எடுத்து செல்வது போன்ற வினோதமான வேலைகளை அவர்கள் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
பெண்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
