யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு
யாழ்(Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
எலிக்காய்ச்சல்
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. ஏறத்தாழ 7200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
குருதி மாதிரிகள்
மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளது.
இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துச்செல்லவுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
