மக்களின் காணி பிணக்கு தொடர்பில் தேரர் ஒருவர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களில் நிலவும் காணிப்பிணக்கு தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் முகமாக இன்று திம்புலாகலை தேவாலங்காரா தேரோ (Thimbulagalai Devalankara Thero) குறித்த பகுதிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
பிரதேச மக்கள் தங்கள் பகுதிக்கு சமூகம் தந்து தாங்கள் எதிர்நோக்கும் காணிப்பிணக்கு தொடர்பாக தீர்வு பெற்றுத் தருமாறு அவரிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே அவர் அவ்விடத்திற்கு சமூகமளித்துள்ள்ளார்.
தங்களது காணிகளை சிலர் அத்துமீறி அபகரித்து வருவதாகவும் இதனால் இன முரண்பாடு எற்பட்டு கலகம் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களிடம் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு பதிவு செய்தும் பலன் எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனவும் தேரரிடம் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்களது அரச ஆவணங்களையும் பார்வைக்கு சமர்ப்பித்தனர். பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு காணி அரச ஒப்பம் வழங்கப்பட்டிருந்தும் அதற்குள் பலாத்காரமாக பயமுறுத்தி குறித்த காணி பகுதிக்குள் சிலர் அத்துமீறி குடியேறி வருவதாகவும் அவர்களை வெளியேற்றி தருமாறும் தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சம்பவங்களை கேட்டறிந்து கொண்ட தேரர் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ் விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் அதற்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்றால் கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதாகவும், அதற்கும் தீர்வு கிடைக்கவில்லையென்றால் மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவில் ஒன்று கூடி நியாயம் வேண்டி கவனயிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட எல்லோரும் தயாரக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு மக்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேச மக்கள் தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பிரதேசம் தற்போது காணிப் பிணக்கு அடிக்கடி இடம்பெறும் வலயமாக மாறியுள்ளது. இதில் பிரதேச செயலகம் தமது பணியினை முன்னெடுக்க முடியாத அவல நிலமையில் உள்ளது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியினை அரசியல் பிரதிநிதிகள், பொலிஸார்,மற்றும் அரச நிர்வாகங்கள் மீது வெளிப்படுத்துகின்றனர்.







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri
