ஜனாதிபதியின் விருப்பத்தின் பெயரில் தரப்பட்ட பதவி: என்னை ஏமாற்ற முடியாது - தேரர் அறிவிப்பு
எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் தனது குரலை யாரும் அடக்க முடியாது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Ven. Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியும் துறவிகள் குரல் அமைப்பின் தலைவருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் குரலை அடக்கும் நோக்கத்தில் தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இவர் நியமிக்கப்பட்டதாக சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பதவி ஜனாதிபதியின் விருப்பத்தின் பெயரில் தரப்பட்டது. எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் எனது குரலை யாரும் அடக்க முடியாது.
எவ்வாறான வரப் பிரசாதங்களுக்கும் நான் ஏமாந்தவன் இல்லை. எதனாலும் என்னை ஏமாற்ற முடியாது. எனது குரல் எப்போதும் ஓங்கியிருக்கும்.
அது இன்றும், நாளையும் எப்போதும் மக்களுக்காக இருக்கும். தவறுகளை தட்டிக் கேட்பேன். சுட்டிக்காட்டுவேன் என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரானார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri