கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரானார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
கொழும்பு நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியும் துறவிகள் குரல் அமைப்பின் தலைவருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் ஆட்சிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்கு.
அரசாங்கத்தின் மீது அண்மைய காலத்தில் விமர்சனங்களை முன்வைத்த அவர், அண்மைய கால வரலாற்றில் குறுகிய காலத்தில் மக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என கூறியிருந்தார். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் கடுமையாக விமர்சனம் செய்தும் வந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம், முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கி, அவரது வாயை அடைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் தரப்பில் பேசப்பட்டு வந்தது.
ஆனந்த தேரர், கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இவ்வாறான நிலையில் ஆனந்த தேரர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri
