வைத்தியசாலையிலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் - எம்.ஏ.சுஹைர் அகமட் எச்சரிக்கை
எரிபொருளுக்கு வரிசையில் நிற்பது போல ஒர் இரு கிழமைகளில் மருந்துக்காக வைத்தியசாலை மற்றும் பாமசிகளில் வரிசையில் காத்திருக்கவேண்டிய ஏற்படும் என மட்டு. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் வைத்தியர் எம்.ஏ.சுஹைர் அகமட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக இன்று (07) 'அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துக்கள் இல்லாமல் சீரழிந்துவருகின்றது மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன' எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற முன்னாள் வைத்தியர்கள் ஆர்ப்பாட்ட பேரணியின்போது ஊடகவயலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையில் சுகாதார சேவையானது இலவச சுகாதார சேவை இன்று வரை காணப்பட்டு வருகின்றது, இந்த நிலையில் இலங்கையின் மோசமான இந்த பொருளாதார முகாமைத்துவமானது இன்று சுகாதார சேவையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசமான நிதி முகாமைத்துவத்தினால் இன்று அரசாங்க வைத்திய சாலையில் அஸபிறின், நியூசிக் போன்ற அடிப்படை மருந்துகளும் மொத்தமாக வைத்தியசாலைகளில் இல்லாமல் உள்ளதுடன் ஏனைய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நோயாளிகள் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் சத்திரசிகிச்சைகள் அதிகமான வைத்தியசாலையில் பிற்போடப்பட்டுள்ளதுடன் அவசர சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெற்று வருகின்றது
இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் ஓர் இரு வாரங்களில் இலவச சுகாதார சேவைகள் முற்று முழுதாக முடக்கப்படும் இதனால் இலங்கையில் வாழும் ஏழை மக்கள் இதன் மூலம் பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டிவரும்.
எங்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய மருந்து வழங்கும் அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி இன்னும் இலங்கையில் ஒருர் இரு வாரங்களுக்கான மருந்துகள் மாத்திரதே உள்ளதாக.
எனவே, இதன் காரணமான கிளினிக் போன்ற முக்கியமான துறைகளில் நோயாளிகள் மருந்துக்களை பெற்றுக் கொள்ள இப்போது மக்கள் எரிபொருள், எரிவாயுக்களுக்கு வரிசையில் நிற்பது போல இன்னும் ஒர் இரு கிழமைகளில் வரிசையில் வைத்தியசாலைகளிலும் தனியார் பாமசிகளிலும் காத்திருக்கவேண்டிய மிக கஷ்டமான நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
