என்னை ஓரம் கட்டுவதாக கூறுவதில் உண்மையில்லை! - பிரதமர்
இந்த அரசாங்கத்தில் தமக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என சில தரப்பினர் செய்யும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தில் நான் ஓரம் கட்டப்படவில்லை.
சில சந்தர்ப்பங்களில் நான் மறைமுகமாக தொழிற்பட்டு வருகின்றேன். எல்லா நேரங்களிலும் நான் பிரபல்யம் அடையும் நோக்கில் பணிகளை முன்னெடுப்பதில்லை. செய்திகளை வாசிப்பவர்கள் கூட அரசாங்கத்தை புகழும் செய்திகளை விடவும் அரசாங்கத்தை இகழும் செய்திகளையே அதிகம் விரும்பிப் படிப்பார்கள்.
கோவிட் நோய்த் தொற்று மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. தற்பொழுது தடுப்பூசி கிடைக்க பெற்றுள்ளதனால் இந்த அனர்த்தத்திலிருந்து வெளிவர முடியும் என எதிர்பார்ப்பதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “நாட்டில் இராணுவமயமாக்கல் எதுவும் கிடையாது. ஜனாதிபதி தகுதியான சில இராணுவ அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளார்.
நான் ஓர் சட்டத்தரணி என்ற ரீதியில் சட்டத்தரணிகளை அதிகம் இணைத்துக் கொள்ள விரும்புவது போன்று முன்னாள் படைவீரர் என்ற வகையில் ஜனாதிபதி படைவீரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதாக“ தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
